Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அசானி புயலால்… 200 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் வெளியேற்றம்…!!!

வங்கக்கடலில் புயல் எதிரொலியால் கடல் நீர் 100 முதல் 200 மீட்டர் வரை வெளியேறியுள்ளது.

நாகை மாவட்டத்தில் கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், அக்கரைப்பேட்ட, செருதூர், வாணவன்மகாதேவி, வெள்ளப்பள்ளம், வேதாரண்யம், விழுந்தமாவடி, புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை, கோடியக்காடு, கோடியக்கரை உட்பட பல மீனவக் கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள மணியன் தீவு, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை ஆகிய மீனவ கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை வங்ககடலில் புயலின் எதிரொலியால் கடல் நீர் 100 மீட்டரிலிருந்து 200 மீட்டர் வரை இரண்டாவது நாளாக வெளியேறியது.

இதனால் மீனவர்கள் கடும் பயத்தில் உள்ளார்கள். புயல் காரணமாக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள். இந்த நிலையில் கடல்நீர் வெளியேறியதால் மீனவர்கள் தங்களின் பைபர் படகுகளை கரையிலிருந்து வெகுதூரம் தள்ளி பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். கடல் சீற்றம் காரணமாக பைபர் படகில் சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் சுமார் 5,000 பேர் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. கடல் சீற்றம் குறைந்து மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு செல்ல இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என்று மீனவர்கள் கூறினார்கள்.

மேலும் பொதுவாக அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் நீர் வெளியேறுவதும்  உள்வாங்குவதுமாக இருக்கும். தற்சமயம் அசானி புயலால் கடல் சீற்றம் அடைந்து மாலை நேரத்தில் சுமார் 100 முதல் 200 மீட்டர் வரை வெளியேறும். அதன்பின் அந்த நீர் அதிகாலை கடலுக்குள் செல்லும். வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக வெப்பம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றுடன் காணப்படுகின்றது. மேலும் கடல் நீர் தெளிவில்லாமல் சேறு கலந்த நீராக உள்ளன.

Categories

Tech |