Categories
தேசிய செய்திகள்

அசாமில் தொங்கு பாலம் இடிந்து விபத்து… 30 மாணவர்கள் காயம்….!!!

அசாமில் தொங்கு பாலம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 30 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

அசாமின் க்ரீம் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சிங்கலா ஆற்றின் மீது தொங்கு பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலம் செராகி மற்றும் அருகே உள்ள கிராமத்தை இணைக்குமாறு கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியிலுள்ள பள்ளி மாணவர்கள் இந்த பாலத்தின் வழியாக பல ஆண்டுகளாக ஆற்றை கடந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மாணவர்கள் சிலர் பாலத்தின் வழியே ஆற்றை கடந்து செல்லும்போது திடீரென பாலம் இடிந்து விழுந்தது .இதில் 30 மாணவர்கள் ஆற்றில் விழுந்து காயமடைந்தனர். உடனே தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Categories

Tech |