Categories
தேசிய செய்திகள்

அசாமில் 2வது முறையாக… 27 மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம்…!!!!!

வடகிழக்கு மாகாணங்களில் ஒன்றான அசாமில் இடைநிலை கல்வி வாரியம் அசாம் நடத்தும் அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 3 குரூப் 4 பிரிவில் காலியாக இருக்கின்ற சுமார் 30000 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்வை சுமார் 14 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இதில் குரூப்-4 தேர்வுகள் கடந்த 21 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் குரூப் 3 தேர்வுகள் இன்று நடைபெறுகின்றது. மேலும் வருகின்ற செப்டம்பர் 11ஆம் தேதியும் குரூப் 3 பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெற இருக்கின்றது. இந்த சூழலில் கடந்த வாரம் நடைபெற்ற தேர்வின் போது முறைகேடுகளை தவிர்ப்பதற்காக அசாம் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன்படி தேர்வு மையங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் காலை முதல் தேர்வு முடியும் வரை இணைய சேவை துண்டிக்கப்பட்டு இருக்கின்றது. அதேபோன்று தேர்வு மையங்கள் அமைந்திருக்கின்ற வாகனங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்த சூழலில் இந்த நடைமுறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை விசாரித்த கவுகாத்தி ஹை கோர்ட் இந்த நடைமுறைக்கு தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டிருக்கிறது. இதனை அடுத்து இரண்டாவது முறையாக இன்றும் தேர்வின் போது 27 மாவட்டங்களில் இணைய சேவைகள் 4 மணி நேரத்திற்கு மேலாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தேர்வுகள் நடைபெறும் 27 மாவட்டங்களிலும் 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Categories

Tech |