Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அசால்டாக உலா வரும் கரடி…. புதர்களில் பதுங்கியிருக்க வாய்ப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜிகினியில் நந்தனவனா லேஅவுட் என்ற குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி சாதாரணமாக அங்கும் இங்கும் உலா வந்தது. இதுகுறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்து பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

இதனால் கரடியின் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து புதர்களுக்குள் கரடி பதுங்கியிருக்க வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Categories

Tech |