Categories
கிரிக்கெட் விளையாட்டு

அசால்ட்டாக செயல்பட்ட துபே…. கடும் கோபத்தில் ஜடேஜா…. தலையில் கை வைத்த பிராவோ…!!

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 29 ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கேவும், குஜராத் டைட்டன்ஸ்சும் மோதியுள்ளது.

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 29 லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்சும், சிஎஸ்கே அணியும் மோதியுள்ளது. இதில் முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 169/5 ரன்களை எடுத்துள்ளது. இந்த ஆட்டத்தில் ருத்ராஜ்ஜூம், ராயுடும் அதிகளவில் ரன்களை குவித்துள்ளார்கள். இதனையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் முதலில் ஷூப்மன், விஜய் சங்கர் விளையாடியுள்ளார்கள். ஆனால் இவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்துள்ளார்கள். இதனை தொடர்ந்து களமிறங்கிய ராகுலும், மனோகரும் ஆட்டமிழந்துள்ளார்கள். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்துள்ளார்கள். அதன்பின்பு களமிறங்கிய டேவிட் மில்லர், ரஷித் கான் இருவரும் அதிரடியாக விளையாடி தங்களது அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

இந்நிலையில் 16.3 ஆவது ஓவரில் பிராவோ மில்லருக்கு பந்துவீசியுள்ளார். இதனை அவர் தூக்கியடித்ததால் அந்த பந்து லாங் ஆன் திசையில் பறந்துள்ளது. இதனை துபே பிடித்து விடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் தயக்கத்துடன் வந்து 1 பவுன்ஸ் பந்தை பிடித்துள்ளார். அவர் தயக்கத்துடன் இல்லாமல் உறுதியாக ஓடியிருந்தால் அதனை கேட்ச் பிடித்திருப்பார். இதனைக் கண்ட ஜடேஜா தொப்பியைக் கழற்றி கீழே எறிய முற்பட்ட சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 19.5 ஓவரில் 170 ரன்கள் எடுத்து வெற்றி வாகையை சூடியுள்ளது.

Categories

Tech |