இப்போது இருக்ககூடிய சூழலில் அதிமுகவோடு சசிகலா இணைவதற்க்கான கட்டாயம் வருமா என புகழேந்தியிடம் செய்தியாளர் கேட்டதற்கு…
அது நடந்தால்தான் அதிமுக தப்பிக்கும், சசிகலாவை ஏற்றுக் கொண்டு போனால்தான் குழப்பமில்லாத ஒரு நிலைமை, குழப்பம் நீடிக்காது, எல்லாரும் ஏற்றுக் கொண்டால் ஒற்றுமை நிலவும். ஸ்டபிலிட்டி வரும், கட்சி உருபடுவதற்கு வழியாக இருக்கும். அதை எடப்பாடி ஒத்துக்கொள்ள மாட்டார், ஒபிஎஸ் ஒத்துக்கலாம். ஆகவே இந்த கட்சி முடிவு செய்து அழித்து விட்டுத்தான் போவார்.
இப்போ நிறைய பேர் என்கிட்ட பேசிக்கொண்டு இருக்கிறார்கள்…. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று எல்லாரும் சேர்ந்து ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு வந்தாகிவிட்டது. நான் வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டிருக்கிறேன், இது வேறு விதமாக மாறப்போகிறது, இங்கே ஒரு புரட்சி வெடிக்கப் போகிறது கட்சிக்குள், இது நடக்கத்தான் போகிறது. தோல்வியை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சியில் ஜீரோ போச்சு என்றால் அப்போ அதிமுக தொண்டர்கள் வேடிக்கை பார்க்க முடியுமா ? அது வேடிக்கை பார்க்க முடியாது என தெரிவித்தார். திமுகவில் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்று செய்தியாளர் கேட்டபோது, நான் இப்படி சொன்னால் நீங்கள் இப்படி தான் கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும், நான் திமுகவில் இணைவதே இல்லை என்றெல்லாம் நான் பேச வரவில்லை, நான் ஞாயத்தை பேசிக்கொண்டிருக்கிறேன்.
ஆகவே அதிமுக கட்சி 90% தோற்றுப்போனது. இந்த தலைமை ஏமாற்றிக்கொண்டு இபிஎஸ் – ஓபிஎஸ் இந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முடிவெடுத்து திருமதி சசிகலாவோடு இணைந்து அவர்களை தேடிச்சென்று இணைத்து சென்றால் தான் இந்த கட்சி காப்பாற்றப்படும் என கூறினார்.