Categories
மாநில செய்திகள்

அசுத்தமாக இருந்த அரசு பள்ளி கழிவறை…. நேரடியாக களத்தில் இறங்கி சுத்தம் செய்த எம்எல்ஏ…. பொதுமக்கள் நெகிழ்ச்சி…..!!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இலக்கியம்பட்டி பகுதியில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியை பாமக எம்.எல்.ஏ எஸ்.பி வெங்கடேஸ்வரன் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்போது பள்ளியின் கழிவறை மிகவும் அசுத்தமாக இருப்பதை கண்டு வேதனை அடைந்தார். இதனால் பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணம்மாள் மற்றும் உதவியாளருடன் இணைந்து பினாயில் மற்றும் ப்ளீச்சிங் பவுடரை பயன்படுத்தி கழிவறையை சுத்தம் செய்தார்.

அதன்பின் பள்ளி நிர்வாகத்திடம் ஏழை மாணவிகள் படிக்கும் பள்ளியில் அவர்களின் சுகாதாரத்தை கண்டிப்பாக பாதுகாக்க வேண்டியது அவசியம் எனவும், கழிவறையை இதே போன்று தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் எனவும்கூறினார். அதோடு கழிவறையை சுத்தம் செய்யும் பினாயில் ப்ளீச்சிங் பவுடர் போன்றவைகள் இல்லாவிட்டால் என்னிடம் கேளுங்கள் நான் வாங்கித் தருகிறேன் எனவும் கூறினார்.

இதனையடுத்து பயன்படுத்தப்படாமல் இருந்த கழிவறைகளில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தி ஆவதை கண்ட எம்எல்ஏ உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலருக்கு செல்போன் வாயிலாக தொடர்பு கொண்டு பள்ளி முழுவதும் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பள்ளிகளில் கழிவறைகள் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால்தான் மாணவிகள் கழிவறைகளை பயன்படுத்த முடியாமல் இருக்கின்றனர்.

எனவே பள்ளிகளில் தூய்மை பணியாளர்களை அமர்த்தி கழிவறைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். அதோடு பள்ளியில் உள்ள பயன்படுத்தப்படாத கழிவறைகளை அகற்றி சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அதிநவீன வசதிகளுடன் கூடிய கழிவறை அமைக்கப்படும் என்றும், அரசு பள்ளியின் தரத்தை உயர்த்துவது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து பேச போவதாகவும் கூறினார். மேலும் எம்எல்ஏ ஒருவர் அரசு பள்ளி கழிவறையை சுத்தம் செய்த சம்பவம் பொது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |