Categories
லைப் ஸ்டைல்

அசுத்தமான நுரையீரலை சுத்தப்படுத்த…. இதில் ஒரு பொருள் மட்டுமே போதும்…!!!

நம்முடைய நுரையீரலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். நுரையீரலில் தொற்று ஏற்பட்டால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும். புகை பிடிப்பவர்களுக்கு அதிகமாக நுரையீரலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள தினமும் ஏதாவது ஒரு ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நுரையீரலில் உள்ள அசுத்தத்தை நீக்கி சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

இஞ்சி நுரையீரலின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. எனவே இஞ்சியை உணவில்  சேர்த்துக்கொள்ளலாம்.

மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும், நச்சுத்தன்மையை நீக்குவதற்கு உதவுகிறது.

ஒரு ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது நுரையீரலை சுத்தப்படுத்துகிறது. சளி மற்றும் இருமலை போக்குகிறது.

பூண்டு மூச்சுத்திணறலை போக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு பூண்டு ஒரு அற்புதமான உணவாகும்.

நுரையீரலை சுத்தம் செய்ய கார்போஹைட்ரேட் குறைவாகவும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகமாக உள்ள உணவை சாப்பிட வேண்டும்.

நுரையீரல் திறனை மேம்படுத்த நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டம், நீச்சல், நடனம், டென்னிஸ் போன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொண்டால் நுரையீரல் நோயை விரட்டியடிக்கலாம்.

Categories

Tech |