அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அசுரன். பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகியிருந்தது. மேலும் இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது அசுரன் படம் தெலுங்கில் நாரப்பா என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
Fight for what is YOURS… at the right time!#NarappaTrailer out now: https://t.co/KFYzLXugzY
Meet #NarappaOnPrime, July 20. @PrimeVideoIN#Priyamani @KarthikRathnam3 #SrikanthAddala #ManiSharma @SureshProdns @theVcreations pic.twitter.com/cWlmQMbXc1
— Venkatesh Daggubati (@VenkyMama) July 14, 2021
இதில் வெங்கடேஷ், பிரியாமணி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஜூலை 20-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் நாரப்பா படத்தின் அதிரடியான டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .