‘அசுரன்’ பட நடிகை மஞ்சுவாரியரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அசுரன் . இந்தப் படத்திற்க்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. மேலும் வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் , சிறந்த தமிழ் படம் என்ற விருதையும் அசுரன் திரைப்படம் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் பச்சையம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் நடிகை மஞ்சு வாரியர் .
இந்நிலையில் நடிகை மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அசுரன்’ படத்தில் இரண்டு இளைஞர்களுக்கு அம்மாவாக நடித்த நடிகையா? இவர் என ஆச்சரியமடைந்துள்ளனர் . 42 வயதான மஞ்சு வாரியர் இன்றைய இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் இந்த புகைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.