தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் 280 தெருக்களில் 110 – 25 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் 583 தெருக்களில் 6-10 பேருக்கும், 1,591 தெருக்களில் 3- 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மொத்தமுள்ள 39,537 தெருக்களில் 2,454 தெருக்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் எனவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.