நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இதனிடையே உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தியதால், கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகிறதா என்று அதிகாரிகள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் கடந்த 6-ஆம் தேதி முதல் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் கடைகள் திறந்திருக்காது. அதில் குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் பலராலும் அசைவம் சாப்பிடாமல் இருக்க முடியாது. அதனால் சனிக்கிழமை அன்று பொதுமக்கள் அசைவ உணவுகளை வாங்கி சேமிக்க கடைகளில் ஏராளமான விதித்து வருகின்றனர். இவ்வாறு சனிக்கிழமைகளில் ஏராளமான அசைவ பிரியர்கள் போட்டிபோட்டுக்கொண்டு மீன், இறைச்சி வகைகளை வாங்குவதால் வியாபாரிகளுக்கு புதிய உற்சாகத்தை தந்து வருகிறது.
இவற்றின் காரணமாக வியாபாரிகள் மீன், இறைச்சி போன்றவற்றின் விலையை பல மடங்கு என உயர்த்தி விற்பனை செய்து வருவதால், பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். வியாபாரிகளின் இந்த நடவடிக்கையால் சனிக்கிழமையன்று அசைவத்தை விரும்பி வாங்கி சாப்பிட முடியாமல் ஏழை, எளிய மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். அதனால் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஊரடங்கு தினத்துக்கு முந்தைய தினமான சனிக்கிழமைகளில் உணவு பாதுகாப்பு துறை அல்லது அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அதிகாரிகள் இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டு திடீர் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.