Categories
ஆன்மிகம் இந்து

கோவிலுக்கு அசைவம் சாப்பிட்டு செல்லாதீர்கள்.. அது நல்லதல்ல..!!

அசைவம் சாப்பிட்டபின் கோவிலுக்கு ஏன் செல்லக்கூடாது என்று நம் வீட்டின் பெரியோர்கள் சொல்வதன் காரணம்..!

இந்துக்களின் முறைப்படி அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது என்று கூறப்படும் பழக்கமானது நமது முன்னோர்களின் காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வருகின்றது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்று யோசித்தது உண்டா நாம்.

சாப்பிடும்உணவிற்கும், மனதிற்கும்  நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எப்படி எனில் உதாரணமாக நம் வயிறு அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்,  காரம் அதிகம் சாப்பிட்டால் கோபம் வருவதை போன்ற உணர்வுகள் ஏற்படுத்தும்.

நாம் சாப்பிடும் உணவிற்கும் நம் மனதிற்கும்  தொடர்பு உள்ளது என்பதை குறிக்கிறது. கோவிலுக்கு செல்லும் பொழுது நம்முடைய மனம் மற்றும் உடல் அளவில் சுத்தமாக செல்லவேண்டும். நாம் சாப்பிடும் அசைவ உணவுகள் ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் அது நமது மனதளவில் ஒருவகை மந்தமான நிலையை ஏற்படுத்துகிறது.

எனவே நம் மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோவிலுக்குள் செல்லும் பொழுது அந்த சக்தியை உணரக் கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார்கள். ஏனெனில் அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை கொண்டவை.

இதனால் தான் நாம் கோவிலுக்கு செல்லும் பொழுது அசைவம் சாப்பிடாமல் எளிமையான உணவை மிதமான அளவில் சாப்பிட்டு மனதில் உற்சாகத்தோடும் இறைவனை தரிசிக்க செல்ல வேண்டுமென்றும் நமது முன்னோர்கள் கூறுகிறார்கள்.

நாம் ஒரு வேளை நாம் அசைவ உணவு சாப்பிட்டபின் கோவிலுக்கு செல்ல வேண்டுமென்று நிலைகள் ஏற்பட்டால் நாம் சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்கு பின்னர் குளித்துவிட்டு கோவிலுக்கு செல்வது மிகவும் நல்லது.

இதுவே அசைவம் சாப்பிட்டபின் கோவிலுக்கு செல்லக்கூடாது என்பதற்கான  காரணங்களாகும்..!

Categories

Tech |