உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் நட்ஸ் வகைகளை எப்படி சாப்பிட வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக பருப்பு வகைகளை அதிக அளவு சாப்பிடுவது மிகவும் நல்லது. நட்ஸ் சாப்பிடுவதால் உடல் பருமன் மிகவும் குறையும். நட்ஸ் வகைகள் பல உள்ளன. அதில் பல்லாயிரக்கணக்கான பயன்கள் நிறைந்துள்ளன. வேர்க்கடலை, வால்நட், பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதனை சாப்பிடுவது அசைவ உணவுக்கு நிகரானது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உங்கள் உடலில் உள்ள அத்தனை பிரச்சினைக்கும் நல்ல தீர்வாக இது இருக்கும். இதனை அப்படியே சாப்பிடுவதை விட நீரில் ஊற வைத்து சாப்பிடுவது பலன்களை முழுமையாக பெற உதவும். அதன்படி நட்ஸ்களை ஊறவைத்து. பாதாம் மற்றும் ஹேசல்நட் (8 முதல் 12 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்). பிஸ்தா 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வால்நெட் நான்கு மணி நேரமும், முந்திரி இரண்டு முதல் நான்கு மணி நேரமும், பேக்கன் 6 மணி நேரமும் ஊற வைத்து சாப்பிடுவது அதன் சத்துகளை முழுமையாக உங்களுக்கு கிடைக்க உதவும்.