டெல்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். அவர்கள் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருப்பார்கள். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை தொடர்ச்சியாக இந்த பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்த்து வருகின்றனர். மத்திய அரசாங்கம் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களை பல்கலைக்கழக துணைவேந்தராக அறிவித்தது. இது போதாது என்று பாஜக கட்சியின் அங்கமாக இருக்கும் மாணவர் அமைப்பின் ஏபிவிபி சேர்ந்தவர்கள் ஜேஎன்யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
கடந்த 2020ம் ஆம் ஆண்டு இரவு நேரத்தில்விடுதிக்குள் நுழைத்த ஏ.பி.வி.பி அமைப்பினர் மாணவர்களுக்கு ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது. தற்போது மீண்டும் இந்த பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் அசைவ உணவு சாப்பிட்டதால் ஏ.பி.வி.பி அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர், இதில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.