Categories
மாநில செய்திகள்

அசைவ பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அசைவ பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக மீன்பிடி தடைக்காலம் உள்ளிட்ட காரணங்களால் மீன் விலை உச்சத்தில் இருந்தது. தற்போது மீன் பிடி தடை காலம் முடிவடைந்து மீனவர்கள் மீண்டும் பழையபடி மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளதால் இன்று மீன் விலை சற்று குறைந்துள்ளது.

சென்னை காசிமேடு உள்ளிட்ட தமிழகத்தின் பல மார்க்கெட்டுகளில் மீன் விலை குறைந்து காணப்பட்டது. அதன்படி சராசரியாக ஒரு கிலோ நெத்திலி 150 ரூபாய்க்கும்,  இறால் – நண்டு ரூபாய் 300க்கும், கடம்பா கிலோ 250 ரூபாய்க்கும், வஞ்சிரம் கிலோ 900 ரூபாய்க்கு மற்றும் தோல்பாறை 300 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் மீன் பிரியர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |