நடிகர் அசோக் செல்வனின் அடுத்த திரைப்படம் குறித்து தகவல் வெளியாகிவுள்ளது.
நடிகர் அசோக் செல்வன் தற்போது “நித்தம் ஒரு வானம்” திரைப்படத்தில் நடிக்கிறார். Viacom 18 studios மற்றும் ரைஸ் Rise East Entertainment இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார்கள். Viacom 18 studios “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்திற்கு பிறகு தமிழில் நேரடியாக தயாரிக்க உள்ள திரைப்படம் “நித்தம் ஒரு வானம்” இத்திரை படம் தெலுங்கிலும் உருவாகிறது. தெலுங்கில் இப்படத்திற்கான பெயர் ஆகாஷம்.
இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.ஏ.கார்த்திக் இயக்குகிறார். நித்தம் ஒரு வானம் திரைப்படம் மனதின் நேர்மறை எண்ணங்கள், அன்பு, சந்தோஷம் போன்றவற்றை பிரதிபலிக்கும் பயணத்தை கொண்டதாக எடுக்கப்படுகிறது. இத்திரைப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.
இத்திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை துல்கர் சல்மான் வெளியிட்டிருக்கிறார். COO Viacom 18 studios அஜித் அந்தரே இத்திரைப்படத்தைப் பற்றி கூறியதாவது, “எங்கள் படைப்புகளில் தமிழ் மற்றும் தெலுங்கின் வெற்றியை அடுத்து இரு மொழிகளிலும் படங்களை தயாரிக்க உள்ளோம். திறன் வாய்ந்த நடிகர்கள் இயக்குனர்கள் என கொண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இப்படம் அனைவரின் பாராட்டை பெரும் என நம்புகின்றோம்.
இத்திரைப்படம் இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டு படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்கு கோப்பி சுந்தர் இசை அமைத்துள்ளார். மேலும் பல கலைஞர்களை உள்ளடக்கியுள்ளது. இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், இசை வெளியீடு என அடுத்தடுத்து கூடிய சீக்கிரம் அதிகாரபூர்வமான செய்தி வெளியாகும்” என அவர் கூறியுள்ளார்.