Categories
சினிமா தமிழ் சினிமா

அசோக் செல்வனின் புதிய படத்தில் மூன்று ஹீரோயின்கள்… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஆர்.கார்த்திக் இயக்கத்தில்அசோக்செல்வன் நடிக்கும் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

தமிழ் திரையுலகில் நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, கூட்டத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் . இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் அசோக் செல்வன் அடுத்ததாக நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்.கார்த்திக் இயக்கும் இந்த படத்தை வியகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

மேலும் இந்த படத்தில் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளனர் ‌. இதில் ரிது வர்மா கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் பிரபலமடைந்தவர். அதேபோல் அபர்ணா பாலமுரளி சூரரைப் போற்று படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தெலுங்கு நடிகை சிவாத்மிகா கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடிக்கிறார்.

Categories

Tech |