நடிகர் அசோக் செல்வன் உடன் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் “வான்” கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ மை கடவுளே என்ற படத்தின் வெற்றிக்குப் பிறகு அசோக் செல்வன் தீனி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிக்கவிருக்கும் புதிய படத்தில் மூன்று பிரபல கதாநாயகி நடிப்பதால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சூரரை போற்று’ அபர்ணா பாலமுரளி, ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ ரித்து வர்மா, தெலுங்கு நடிகர் ராஜசேகர் – ஜீவிதா தம்பதிகளின் மகள் சிவாத்மிகா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.