லாரியும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் முட்டாஞ்செட்டி சாலையில் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பிரியா, தங்கராஜன், சந்திரா, தினேஷ்குமார், சுதா, பிரீத்தி, ராஜம்மாள், சரோஜா, செண்பகம், ரேவதி, கவிதா உள்ளிட்ட 15 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.