Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அச்சச்சோ…! இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்…. திருவாரூர் கோயிலில் பரபரப்பு…!!!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆயிரம் வருடங்களுக்கும் பழமையான தியாகராஜர் கோயிலுக்கு எதிரே 5 வெளி நிலப்பரப்பில் கமலாலயக் குளம் உள்ளது. இந்த குளமானது மிகவும் பிரசித்தி பெற்றது. காசிக்கு இணையான தீர்த்தக்குளம் என்பதனால் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த குளத்திற்கு வந்து புனித நீராடிச் செல்வதை வழக்கமாக வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக கமலாலயக் குளத்தின் தென்கரையில் அமைந்துள்ள சுற்றுசுவர் சுமார் 100 அடி நீளத்திற்கு இடிந்து குளத்துக்குள் விழுந்துள்ளது.

இதனால் திருவாரூர் மேல வீதி, தெற்கு வீதி சந்திக்கும் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |