பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ளுதல், விடைத்தாள் நகல் உள்ளிட்டவச்சிற்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்குதல், செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடுதல், உள்ளிட்ட பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்தவுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் அதன் கீழ் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு இடப்பெயர்வு சான்றிதழ் வழங்குதல், பட்டப்படிப்பு, மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ளுதல், தொலைந்துபோன சான்றிதழ்களுக்கு மாற்றாக புதிய சான்றிதல்கள் வழங்குதல், விடைத்தாள் நகல் கோருதல் உள்ளிட்டவற்றிற்க்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இருப்பினும் வழக்கமான தேர்வு கட்டணம், பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்று வினியோகம், மதிப்பெண் சான்றிதழ், மறுமதிப்பீடு, மறுகூட்டல் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு தர பட்டுள்ளதாகவும், அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.