சலூனில் ஹேர் வாஷ் செய்துகொண்டிருந்தபோது பெண் அடிக்கடி தலையை தூக்கியதால் ஹேர் டிரஸ்ஸர் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ட்விட்டரில் தற்போது ஒரு வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. 44 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ 60 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. அந்த வீடியோவில் சலூன் ஒன்றில் ஒரு பெண்ணுக்கு ஹேர்வாஷ் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்போது அவரது அருகில் தோழி அமர்ந்து ஆர்வமாக பேசிக் கொண்டிருக்கிறார். ஹேர் வாஷ் செய்து கொண்டிருந்த போது அந்த பெண் அடிக்கடி பேச்சு ஆர்வத்தில் தலையை தூக்கி தூக்கி அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார். இதனால் ஹேர்வாஷ் செய்வதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இரண்டு மூன்று முறை அந்த ஹேர் டிரஸ்ஸர் தலையைக் கீழே வைக்கும்படி அவரிடம் பணிவாக கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் பேச்சு ஆர்வத்தில் அடிக்கடி தூக்கினார்.
https://twitter.com/Jamie24272184/status/1411797742154915846
இதனால் ஆத்திரமடைந்த அந்த சலூன் கடை ஊழியர் இரண்டாவது மூன்றாவது முறை அவரது தலைமுடியை பிடித்து இழுத்து தலைதூக்க விடாமல் பிடித்து இருந்தாலும், அந்த பெண் தலையை தூக்கியதால் ஆத்திரமடைந்த அந்த ஊழியர் பெண்ணின் முகத்தில் தனது கையிலிருந்த வாட்டர் கன் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து விட்டார். இதை கண்டதும் அருகில் இருந்தவர்கள் எல்லாம் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.