Categories
மாநில செய்திகள்

அச்சச்சோ…! சின்னம்மா கூட்டத்தில் இப்படியா ? 1இல்ல 2இல்ல 20பேர் பரபரப்பு புகார் …!!

சசிகலா வருகை கூட்ட நெரிசலில் 20பேரிடம் 5 செல்போன், ரூபாய் 96,000 பணம் கொள்ளை போயுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையாகி தமிழகம் வந்த சசிகலா அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவரின் பங்களிப்பு இல்லாமல் அதிமுக, அமமுக தேர்தலில் களம் இறங்கி படுதோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து அரசியலுக்கு நான் வருவேன், அதிமுகவை மீட்டு எடுப்பேன் என்று சசிகலா தனது ஆதரவாளர்களுடன் பேசும் ஆடியோ தமிழக அரசியலில் பேசுபொருளாக இருந்தது.

இதனால் சசிகலா எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு களுக்கு நடுவே நேற்று சசிகலா ஜெயலலிதா நினைவிடம் சென்றார். சிறை தண்டனை பெற்று முதன்முறையாக சசிகலா ஜெயலலிதா நினைவிடம் சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக கொடி கட்டிய காரில் நினைவிடம் சென்ற சசிகலாவுக்கு வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்க கூடியிருந்தனர்.

பின்னர் நினைவிடம் சென்ற சசிகலா தன் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்து விட்டேன் என்று தெரிவித்தார். சசிகலா ஜெயலலிதா நினைவிடம் வருவது அவரின் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தையும், சசிகலா  அரசியல் நகர்வின் தொடக்கமும் என மகிழ்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் சசிகலா ஆதரவாளர்கள் 20 பேர் அண்ணா சதுக்கம் போலீல் அளித்த புகாரில், சசிகலா வருகை கூட்ட நெரிசலில் இருந்த 5 பேரிடம் 5 செல்போன், 93 ஆயிரம் ரூபாய் பணம்  கொள்ளை போயுள்ளது. பணம்,  செல்போனை பறிகொடுத்த 20 பேர் அளித்த புகாரின் பேரில் அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்

Categories

Tech |