Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!…. திடீரென உயிரிழந்த “பாவியா முதலை”…. சோகத்தில் ஆழ்ந்த பக்தர்கள்….!!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் வாழ்ந்து வந்த முதலை  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆனந்தபுரம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முழுவதும் தண்ணீரால் சுழப்பட்டுள்ளது.  இங்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பாவியா என்ற முதலை வசித்து வந்தது. இந்த முதலை இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை மட்டும் சாப்பிடுவதால் இதற்கு அசைவ முதலை  என்று பெயரிடப்பட்டது.

இந்நிலையில்  உடல்நலக்குறைவு காரணமாக  நேற்று  உயிரிழந்தது. இதனையடுத்து முதலையின் உடல் பக்தர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏராளமான பக்தர்கள் அங்கு சென்று முதலைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |