அக்ஷய்குமார் நடிப்பில் சென்ற மாதம் 25ஆம் தேதி திரைக்கு வந்த ராம் சேது திரைப்படம் தோல்வியை சந்தித்துள்ளது. இப்படத்தை ரூபாய்.90 கோடி செலவில் எடுத்திருந்தனர். எனினும் திரையரங்குகளில் ரூபாய்.75 கோடி மட்டுமே வசூலித்தால் ரூ.15 கோடி நஷ்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி பெரியளவில் வசூல் பார்த்த பாகுபலி, கே.ஜி.எப், புஷ்பா படங்களுக்கு பின் பல படங்களை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படங்களாக வெளியிட்டு வருகின்றனர்.
இருப்பினும் இந்த வருடத்தில் வெளியாகிய பல பான் இந்தியா படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது. பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் ரூபாய்.250 கோடி செலவில் தயாரான ராதே ஷியாம் ரூ.100 கோடி நஷ்டத்தை சந்தித்ததாகவும், ரன்பீர் கபூர், வாணிகபூர் போன்றோர் நடிப்பில் ரூ.160 கோடி செலவில் தயாராகி திரைக்கு வந்த சம்ஷேரா ரூ.70 கோடி மட்டுமே வசூலித்ததாகவும் கூறுகின்றனர். இதுபோன்று அமீர்கான் நடிப்பில் ரூ.200 கோடி செலவில் தயாராகி திரைக்குவந்த லால் சிங் சத்தா ரூ.50 கோடி கூட வசூல் செய்யவில்லை என்று கூறுகின்றனர். இந்நிலையில் அக்ஷய்குமார் நடிப்பில் சென்ற மாதம் 25ஆம் தேதி திரைக்கு வந்த ராம் சேது படமும் தோல்வியை சந்தித்துள்ளது.