மோட்டார் சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கல்விக்குடி கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பசுபதி ஈஸ்வரன் என்ற 17 வயதுடைய மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பசுபதி ஈஸ்வரன் அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பர்களான தீபன், கலையரசன், ராகவன் ஆகியோருடன் சேர்ந்து கோவிந்தகுடி சாலையில் மோட்டார் சைக்கிளில்களில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ திடீரென மோட்டார் சைக்கிள்கள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பசுபதி ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயமடைந்த 3 பேருக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய சரக்கு ஆட்டோ ஓட்டுனர் செந்தில்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்