Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!…. பிரபல கல்லூரி. ” கேண்டீனில் 2 மாணவிகள் மோதல்”…. வைரலாகும் வீடியோ….!!!!!

 கல்லூரி மாணவிகள் 2 பேர்  மோதிக் கொண்ட  காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கர்நாடகா  மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியில்  தயானந்த சாகர் என்ற பொறியியல்  கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் அமைந்துள்ள கேண்டீனில் நேற்று மாணவர்கள் சாப்பிட வந்துள்ளனர். அப்போது திடீரென 2  மாணவிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவி மறறொரு மாணவியின் கன்னத்தில் அடித்துள்ளார். இதனையடுத்து அடி வாங்கிய மாணவி பதிலுக்கு பலமுறை அந்த மாணவி அடித்திருக்கிறார்.

இந்த சண்டையை அங்கிருந்த மாணவர்கள் தடுக்க வராமல் மேலும் சண்டையை தூண்டிவிடும் வகையில் கோஷம்  எழுப்பியுள்ளனர். ஆனால் இந்த சண்டைக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. மேலும் பலர்  தங்களது செல்போனில் இந்த சண்டையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு 2  ஆசிரியர்கள் இதே போல் மோதி கொண்ட  காட்சிகள்  வைரலாக பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |