பிரபல நாட்டில் 27 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரக்கா நாடான கொலாம்பியாவில் அமைந்துள்ள பியூப்லோ ரிகோ பகுதியில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் அப்பகுதியில் அமைந்துள்ள நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வாழும் ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று திடீரென அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 குழந்தைகள் உள்ளிட்ட 27 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஏராளமானோர் மண்ணில் புதைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அந்நாட்டு அதிபர் கூறியதாவது. தற்போது ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. மேலும் மண்ணில் புதைந்து இருக்கும் பலரை மீட்பு படையினர் தீவிரமாக மீட்டு வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.