நாய்கள் கடித்து மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தி.புதுப்பட்டி கிராமத்தில் மர்மமான முறையில் மான் ஒன்று காயங்களுடன் இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மானை மீட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
அதில் மேய்ந்துகொண்டிருந்த போது மானை சில நாய்கள் கடித்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் அந்த மானை அருகே உள்ள காட்டு பகுதியில் புதைத்து வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.