ரஜினியை தனுஷ் ஏமாற்றி விட்டதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004ம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இதையறிந்த அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்கள் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
இதனிடையே ரஜினி தனுஷிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியபோது, எனக்கு சிறிது காலம் வேண்டும். பொறுமையாக காத்திருங்கள் என்று கூறிய நிலையில் ஐஸ்வர்யா அண்மையில் வெளியிட்ட ஆல்பம் பாடலுக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் தோழி என குறிப்பிட்டிருக்கின்றார் தனுஷ். தனுஷின் இப்படிப்பட்ட செயல்களால் ரஜினி ரொம்பவே நொந்து போய் இருக்கின்றாராம். தனுஷ், ஐஸ்வர்யா தனக்கு மனைவி இல்லை என்பதை மறைமுகமாகவும் அழுத்தமாகவும் பதிவின் மூலம் கூறி தனது நம்பிக்கையை உடைத்து விட்டாரே என நெருக்கமான வட்டாரத்தில் கூறிவருகிறாராம் ரஜினி.