ரச்சிதா குறித்து ராபர்ட் மாஸ்டர் பேசியுள்ளார்.
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதனை தொடர்ந்து கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, கதிரவன், தனலட்சுமி, விக்ரமன், மகேஸ்வரி, மணிகண்டா , நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி. முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஆனால் பலர் குறைந்த வாக்குகளை பெற்று ஒவ்வொரு வாரமும் வெளியேறினர். அதேபோல் கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இவர் நடிகை ரச்சிதாவை கவர முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அவரது இந்த செயல்கள் சக போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வேடிக்கையாக இருந்தாலும் திருமணம் ஆன பெண்ணிடம் இப்படி நடந்து கொள்ள கூடாது என கண்டனங்களும் எழுந்தது. இந்நிலையில் வெளியே வந்த ராபர்ட் மாஸ்டர் கூறியதாவது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு ஆதரவளித்த எனது ரசிகர்களுக்கு மிக்க நன்றி. இந்நிலையில் நானும் ரச்சிதாவும் நல்ல நண்பர்கள். எங்கள் இருவருக்கும் உள்ள உறவு வெறும் நட்புதான். மேலும் பிக் பாஸ் வீட்டில் ரச்சிதாவுடன் தனிமையில் பேச ஆரம்பித்தேன். அப்படியே எங்களுக்குள் நட்பு உருவானது என அவர் தெரிவித்துள்ளார்.