Categories
உலக செய்திகள்

அச்சச்சோ…. ரூ. 50,73,55,80,000 போச்சே….! ஷாக் ஆனா டிரம்ப்… வெளியான முக்கிய தகவல்…!!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டெனால்டு ட்ரம்பின் சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டெனால்டு டிரம்ப். இவர் ஜனாதிபதியாக ஆட்சி செய்த காலத்தில் இவருடைய சொத்து மதிப்பு குறைந்துள்ளது என புளும்பேர்க் பணக்காரர்களின் பட்டியலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவருடைய சொத்து மதிப்பு குறைந்ததற்காக இரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவையாவன ட்ரம்ப் தனது சொத்துக்களில் முக்கால் பங்கை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதிக்கப்பட்டதால் ட்ரம்பின் சொத்து மதிப்பு 26 % குறைந்துள்ளது. மேலும் மற்றொரு காரணமாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 6ம் தேதி ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் காரணமாக ட்ரம்புடன் கடன் வழங்குபவர்கள், ப்ரோக்கர்கள் வைத்திருந்த இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ட்ரம்பின் சொத்து மதிப்பு ரூ.50,73,55,80,000 குறைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

Categories

Tech |