தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் சேர்ந்தவர் வின்சென்ட் பாஸ்கர். 40 வயதுடைய இவருக்கும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கும் சென்ற ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது வரதட்சணையாக பெண்வீட்டார் சார்பில் 40 சவரன் நகை 3 லட்சம் பணமும் கொடுத்துள்ளனர். இதையடுத்து திருமணம் முடிந்த சில மாதங்களில் பாஸ்கர் நகையை விற்றுள்ளார்.
இதனால் கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது. எனவே இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அது என்னவென்றால், வின்சென்ட் பாஸ்கர் ஏற்கனவே 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதும், 6-வதாக பாளையங்கோட்டையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து வின்சன் பாஸ்கர் தனது 4-வது மனைவி வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் தனிப்படை காவல்துறையினர் வின்சென்ட் பாஸ்கர் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.