புதுக்கோட்டையில் இன்று ஒரே நாளில் மட்டும் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருந்தாலும் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,951 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது வரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,303 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று மட்டும் 107 பேர் உயிரிழந்ததால், தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,721 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நேற்று ஒரே நாளில் 6,998 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,32,454 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது, சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கின்றது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று புதிதாக 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,510 ஆக உயர்ந்துள்ளது.