ஆப்கானில் பத்து நாள்களாக நடைபெற்ற தாக்குதலின் விளைவாக, நாட்டின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. தலைநகர் காபூல், ஆகஸ்ட் 15ஆம் தேதி அவர்களால் கைப்பற்றப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மற்ற நாடுகளுக்கு செல்ல பொதுமக்கள், தலைநகர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துவந்தனர். ஆப்கானில் நிலவும் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் காபூல் விமான நிலையத்திற்கான போக்குவரத்தை ரத்து செய்தன. அதன்படி ராணுவ விமானங்கள் தவிர மற்ற விமானங்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. காபூல் விமான நிலையமும் மூடப்பட்டது.
இந்நிலையில் ஆப்கான் ஊடகங்களில் பெண்கள் அச்சமின்றி செய்திகளை சேகரித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதை தொடர்ந்து பெண்கள் மீது கடுமையான விதிகள் விதிக்கப்படும் என்று பலரும் அஞ்சுகின்றனர். ஆனால் இன்று பெண்கள் அச்சமின்றி செய்திகளை சேகரித்த காட்சி பலரை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது. அவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தியுள்ளனர்.