தமிழகத்தில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தற்கொலை செய்துகொண் செய்து கொள்ளக்கூடாது என நடிகர் சூர்யா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே…. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று தொடங்கிய நடிகர் சூர்யா, மாணவ மாணவிகள் எல்லாம் வாழ்க்கையில் அச்சம் இல்லாமல் நம்பிக்கையோடு இருக்கனும்னு ஒரு அண்ணனாக வேண்டி கேட்டுக்கிறேன் என்றார்.
உங்க வாழ்க்கையில் போன வாரம் அல்லது போன மாதம் இருந்த ஏதோ ஒரு மிகப்பெரிய கவலை, வேதனை இப்போது இருக்கா… யோசிச்சு பாருங்க. நிச்சயமாக குறைந்திருக்கும், இல்லாமல் கூட போயிருக்கும். ஒரு பரீட்சை உங்களுடைய உயிரை விட பெருசு இல்ல. உங்க மனசு கஷ்டமா இருக்கா… நீங்க நம்புறவங்க, உங்களுக்கு ரொம்ப பிடிச்சவுங்க, உங்க அப்பா, அம்மா, இல்ல பெரியவங்க, நண்பர்கள், ஆசிரியர்கள் என யாரிடமாவது மனசு விட்டு பேசுங்க எல்லாவற்றையும்,
இந்த பயம், கவலை, வேதனை, விரக்தி இதெல்லாம் கொஞ்ச நேரத்தில் மறைகின்ற விஷயங்கள். தற்கொலை, வாழ்க்கையை முடித்து விடலாம் என்று முடிவு பண்றது எல்லாம்… உங்களை ரொம்ப விரும்புறவுங்களுக்கு….. அப்பா, அம்மா, குடும்பத்துக்கு நீங்க
கொடுக்கிற வாழ்நாள் தண்டனை, மறந்துவிடாதீர்கள்.
நான் அத்தனை தேர்விலும் பெயில் ஆகி இருக்கேன். ரொம்ப ரொம்ப கேவலமா மார்க் வாங்கியிருக்கேன். ஆனால் உங்களில் ஒருத்தனாக நிச்சயமாக சொல்லமுடியும். மதிப்பெண், தேர்வு, இது மட்டுமே வாழ்க்கை அல்ல. சாதிக்கிறதுக்கு அத்தனை விஷயங்கள் இருக்கு. உங்களை புரிஞ்சுக்கவும், நேசிக்கவும் நிறைய பேர் இருக்கோம். நம்பிக்கை, தைரியம் இருந்தால் வாழ்க்கையில் எல்லோரும் ஜெயிக்கலாம், பெருசா ஜெயிக்கலாம் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே என நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார்.