சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த சம்பத் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் வங்கியில் 50 ரூபாய் புதிய கட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அதில் ஒரு நோட்டில் மட்டும் காந்தியின் படத்திற்கு மேல் கருப்பு நிறம் மை அச்சாகி உள்ளது. இதேபோல காந்தி படத்தின் கீழ் ரூபாய் நோட்டின் மேல் குறியீடு இருந்தது. ஏற்கனவே ஒரு பத்து ரூபாய் நோட்டு இவரிடம் இதுபோல இருப்பதாக தெரிவித்த சம்பத் இரண்டு நோட்களையும் பத்திரப்படுத்தி வைத்துள்ளார்.
அதனை வங்கி அதிகாரிகளிடம் எடுத்துச் சென்று காண்பித்தபோது ரிசர்வ் வங்கி அச்சிடும் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளில் சில நோட்டுகள் இது போன்ற பிழையுடன் வரும். இது தவிர்க்க முடியாதது. அப்படி வரும் நோட்டுகளை சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையின் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். என்று தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் எதுவும் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.