Categories
உலக செய்திகள்

அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சீனா…. எச்சரிக்கை விடுத்த ரிஷி சுனக்…. இங்கிலாந்தில் பரபரப்பு….!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவை திரட்ட தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில்  தலைநகரான லண்டனில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று ரிஷி சுனக் பேசியதாவது, “சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்த நூற்றாண்டில் இங்கிலாந்து மற்றும் உலகின் பாதுகாப்பிற்கும், செழுமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். அமெரிக்கா நாடு முதல் இந்தியா வரையிலான நாடுகளை சீனா குறிவைப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

எனவே சீன நாட்டின் அச்சுறுத்தல் மற்றும் வலியுறுத்தலை சமாளிக்க உலகின் பல நாடுகளை உள்ளடக்கிய ஒரு பரந்த கூட்டணியை என்னால் உருவாக்க முடியும். சீன இணைய அச்சுறுத்தல்களை சமாளிக்கவும் தொழில்நுட்ப பாதுகாப்பில் சிறந்த நடைமுறையைப் பகிர்ந்து கொள்ளவும் சுதந்திர நாடுகளின் புதிய சர்வதேச கூட்டணியை நான் உருவாக்குவேன். சீன இங்கிலாந்து நாட்டின் தொழில்நுட்பத்தைத் திருடி வருகின்றது. அதனை தடுப்பதற்கு இங்கிலாந்து நாட்டில் உள்ள அனைத்து சீன நிறுவனத்தையும் நான் மூடுவேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |