டெல்லியில் ஒமிக்ரான் பாதிப்பு 57 ஆக அதிகரித்துள்ள நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் தற்போது வேகமாக பரவி வருகிறது.. உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தலின் படி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.. இந்தியாவில் இந்த ஒமிக்ரானால் இதுவரை 213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் 57 பேருக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிர மாநிலத்தில் 54 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..
இந்த நிலையில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக தலைநகர் டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, கலாச்சார நிகழ்வுகள், கூட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்துள்ளது.. மேலும் வணிக வளாகங்கள், பணியிடங்களில் மாஸ்க் அணியாவிடில் அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது..