Categories
மாநில செய்திகள்

அச்சுறுத்தும் ஒமைக்ரான்….  கலெக்டர்களுக்கு சுகாதார செயலர் அவசர கடிதம்…!!!!

மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்று புதிய அவதாரம் எடுத்தது. இதற்கு ஒமைக்ரான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.  ஒமைக்ரான்  வைரஸ் டெல்டா வைரசை விட வேகமாக பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இஸ்ரேல், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவிவிட்டது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் “கொரோனா தடுப்பூசி செலுத்த தவறியவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த வேண்டும். இரண்டாவது டோஸ் செலுத்தி கொள்ளாதவர்களையும் கண்டறிந்து, அவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள் போன்றவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்” போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |