கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி மட்டுமே போதும் என விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இதனையடுத்து பல்வேறு விஞ்ஞானிகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இந்தியா முதற்கட்டமாக இரண்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. அதுமட்டுமின்றி கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு முககவசம் மற்றும் தனிமனித இடைவெளி அவசியம் என்று மக்களுக்கு வலியுறுத்தப்பட்டும் வருகின்றது.
இந்நிலையில் வருகின்ற நாட்களில் கொரோனவை கட்டுப்படுத்துவது குறித்து தொடர் ஆய்வுகளில் இங்கிலாந்து மற்றும் சீன பல்கலைக்கழகம் இணைந்து செயல்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து பெரும்பாலான நகரங்களில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு வீரியமான தடுப்பூசி திட்டங்களும், தனிமனித இடைவெளிகளும் போதுமானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வீடுகளில் முடங்கிக் கிடப்பது தேவையற்றது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.