நாய்கள் குரைத்ததால் தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வே.முத்தம்பட்டி கனிகாரன் கொட்டாய் பகுதியில் மாதம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி அப்பகுதியில் இருக்கும் தனது சகோதரி ராஜம்மாள் வீட்டிற்கு மூதாட்டி நடந்து சென்றுள்ளார். அப்போது தெரு நாய்கள் அச்சுறுத்தும் வகையில் மாதம்மாளை பார்த்து குரைத்ததால் நிலைதடுமாறி மூதாட்டி கீழே விழுந்தார்.
அப்போது அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினர் உடனடியாக மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.