கேரளாவில் தற்போது ‘வெஸ்ட் நைல்’ காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது நபர் இந்த காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டிலும் இந்த வைரஸ் பரவுமோ என பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இதனையடுத்து தற்போது தமிழகத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் அது குறித்து விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. குரங்கு அம்மை, ஓமைக்ரான், கொரோனா போன்ற வைரஸ்கள் லிஸ்டில் புதிதாக வெஸ்ட் நைல் வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
Categories