ஜெர்மனியில் “ஒமிக்ரான்” வைரஸ் பற்றிய கவலை குறைந்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் இரண்டு நாட்கள் தொற்றுநோய் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் ? என்பது பற்றிய கருத்துக்கணிப்பு நடைபெற்றது. அதில் ஒமிக்ரான் மற்றும் பிற மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ்களின் மீதான மக்களின் கவலை கணிசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது தொற்று நோய் பற்றிய கருத்துக்கணிப்பில் ( 51% ) பெரும்பான்மையான மக்கள் புதிய ஒமிக்ரான் மாறுபாடுகள் அதிக கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே டிசம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 60 சதவீதம் மக்கள் தொற்றுநோய் மாறுபாடுகள் கவலையளிப்பதாக கூறியிருந்தனர். ஆனால் தற்போது புதிய மாறுபாடுகள் குறித்த கவலை மக்களிடம் குறைந்து வருவது கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.