Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அச்சோ போச்சே.! நடுரோட்டில் கதறிய பெண்…சிசிடிவி யில் சிக்கிய காட்சி …!

கோயம்பத்தூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்துச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்த 58 வயதுடைய விஜயலட்சுமி என்ற பெண் கோவை காரமடை காந்திநகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை அறுக்க முயற்சி செய்தனர்.

5 பவுன் சங்கிலியில் 4 பவுன் கொள்ளையர்களிடமும் ஒரு பவுன் விஜயலகட்சுமியிடனும் இருந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை காரமடை போலீசார் ஆய்வு ஆய்வு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறது.

Categories

Tech |