Categories
தேசிய செய்திகள்

அஜந்தா குகைக்கே இந்த நிலைமையா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒளரங்கபாத் என்ற மாவட்டத்தில் உள்ள அஜந்தா குகை ஓவிய வளாகத்துக்கான குடிநீர் கட்டணமானது செலுத்தப்படாத நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் குடிநீர் சேவையானது துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று வரை சரி செய்ய முடியாத நிலையில் உள்ளதால், குகைக்குள் வரும் இயற்கை வளத்தின் மூலம் எப்படியோ குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த வளாகத்தை சுத்தம் செய்தல் மற்றும் தோட்டத்தைப் பராமரிக்க போதுமான அளவு தண்ணீரானது கிடைப்பதில்லை என இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் மகாராஷ்டிர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்தியா தாக்கரேவிடம் , இந்த பிரச்சனை குறித்து ஏற்கனவே பேசி உள்ளோம். ஆனாலும் இந்த பிரச்சினைக்கான தீர்வானது, இன்றுவரை எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இப்பிரச்சினை குறித்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மிலன் குமார் கூறியுள்ளதாவது, அஜந்தா குகை வளாகத்துக்கான தண்ணீர் இணைப்பு கட்டணமானது ரூ. 3.2 கோடி நிலுவை தொகை உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |