நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் அப்டேட் புத்தாண்டில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. இயக்குனர் ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார் . யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் தயாராகிவரும் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிகர் அஜீத் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் மீண்டும் தொடங்கியது.
இதையடுத்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கடந்த 14ஆம் தேதி வலிமை படத்தின் இசை கோர்ப்பு பணிகள் தொடங்கி இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட்க்காக காத்துக்கிடக்கும் அஜித் ரசிகர்களில் ஒருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யுவன் சங்கர் ராஜாவிடம் வலிமை அப்டேட் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் . இதற்கு பதிலளித்துள்ள யுவன் புத்தாண்டு தினத்தில் வலிமை படம் குறித்த அப்டேட் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மகிழ்ச்சியில் உள்ளனர் அஜித் ரசிகர்கள் .