Categories
சினிமா

அஜித்தின் வலிமை… உனக்குத்தான் இதெல்லாம் நடக்கிறது… ட்விட்டரில் பகிர்ந்த குஷ்பூ…!!!

அஜித்தின் வலிமை படத்தை குறித்து நடிகை குஷ்பூ தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார். தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக அஜித்தின் திரைப்படங்கள் வெளிவராததால் ரசிகர்கள் ஆவலுடன் வலிமை படத்திற்காக காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று வலிமை திரைப்படமானது திருவிழாபோல் ரிலீஸாகியது. இத்திரைப்படம் மாஸாக கிளாஸாக உள்ளது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினரும் பாராட்டுகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பு டுவிட்டரில் தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கின்றார். “எனது ஜார்ஜ் க்ளூனி தல” என்றும் உனக்கு மட்டும்தான் ரசிகர்கள் கூட்டம் இப்படி வருகின்றது எனவும் பாராட்டி இருக்கின்றார். அஜித், வினோத், போனி கபூர் உள்ளிட்ட படக்குழு அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் எனது டார்லிங் ஹீமா குரேஷிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டிருக்கிறார். ரசிகர்கள் இதற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Categories

Tech |