அஜித்தின் வலிமை பட டிக்கெட்டின் விலை அதிக விலை சொல்லியதால் தியேட்டரை பூட்டு போட்டு ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்.
எச்.வினோத் குமார் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் வலிமை திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள ராஜேந்திரா திரையரங்கில் அதிக கட்டணம் வலிமை படத்திற்கு கேட்பதாக, ரசிகர்கள் திரையரங்கை பூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அஜித் திரைப்படமானது கடந்த இரண்டு வருடங்களாக ரிலீஸ் ஆகாத நிலையில் வலிமை படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படத்தில் அஜித்துக்கு ஹீமா குரேஷி ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தை போநீ கபூர் தயாரிக்கின்றார் மற்றும் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். இப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இப்படத்தின் அப்டேட்களை படக்குழுவினர் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் 24ஆம் தேதி ரிலீஸாகவுள்ள வலிமை திரைப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதில் திண்டுக்கல்லில் உள்ள ராஜேந்திரா திரையரங்கில் ஸ்பெஷல் டிக்கெட் 1,500 ரூபாய்க்கு விற்கப்பட்டதால், ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் திரையரங்கை பூட்டு போட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இத்தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ரசிகர்களை சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும் ரசிகர்கள் சமாதானம் ஆகவில்லை. இதனால் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். இந்நிகழ்வால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.